முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலுக்கு பறந்த ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேலுடனான (Israel) போரில் குறைந்தளவிலான பலத்தையே செலுத்தியிருப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் (Iran) – இஸ்ரேல் போர் பதற்றம் என்பது தற்போது அதிக உச்சத்தை எட்டியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றது.

ஈரான் காவல் படை

இந்த நிலையில், இஸ்ரேலுடனான போரில் குறைந்தளவிலான பலத்தையே செலுத்தி வருவதாக ஈரான் காவல்படையின் மூத்த தளபதி மோசென் ரெஸேய் தெரவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு பறந்த ஈரானின் பகிரங்க எச்சரிக்கை | Iranian Commander Warns Israel

இது தொடர்பாக மோசென் ரெஸேய் கூறுகையில், இஸ்ரேலுடனான போரில், ஈரானின் இணுவத் திறனில் 30 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மோதலில் ஈரானின் மொத்தத் திறனில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எங்களின் அனைத்து ஆயுதங்களையும் நாங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை. கடற்படை, எங்களின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் திறன்களைக்கூட நாங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை.

இதேவேளை தேவைப்பட்டால், இராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த ஈரான் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் 

மேலும் தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் நிலையில், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு பறந்த ஈரானின் பகிரங்க எச்சரிக்கை | Iranian Commander Warns Israel

இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், “அமெரிக்கர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தீவிரமாக அழைப்பு விடுக்கும் செய்திகளை பலமுறை அனுப்பி வருகின்றனர்.

ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் நிற்காத வரை, இராஜதந்திரம் மற்றும் உரையாடலுக்கு இடமில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இஸ்ரேலுக்கு எதிரான நமது எதிர்வினைக்குப் பிறகு, இதுபோன்ற நாடுகள் ஆக்கிரமிப்பில் இருந்து தங்களை தூர விலக்கிக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.