வெளியே சென்று வேலை செய்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை தாண்டி வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்ற காலம் எப்போதோ வந்துவிட்டது.
அதிலும் கொரோனாவிற்கு பிறகு பலர் வீட்டில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அப்படி வீட்டில் இருந்தே சம்பாதிக்க பலர் எடுத்த ஆப் தான் யூடியூப், தங்கள் வீட்டில் நடப்பது, மக்களுக்கு தெரியாத விஷயம் காண்பிப்பது என யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு சம்பாதிக்க ஆரம்பித்தனர்.
யூடியூப் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆன ஒருவரை பற்றி நாம் இப்போது பார்ப்போம்.
இர்பான்
இர்பான் வியூஸ் என்ற யூடியூப் பக்கத்தில் உணவுத் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார் இர்பான்.
பிரம்மாண்டமான அசைவ உணவுகளை சாப்பிட்டபடி இவர் கொடுக்கும் ரிவியூக்கள் சமூக வலைதளங்களில் ஏக பிரபலம். யூடியூப் தாண்டி இவருக்கு பேஸ்புக் பக்கத்திலும் பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.
இவர் உணவு ரிவியூக்களை தாண்டி தனது திருமணம் மற்றும் வீட்டில் நடக்கும் இனிய நிகழ்வுகளை அடிக்கடி தனது யூடியூப் சேனலில் போடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமூகவலைதளம்
இர்பானுக்கு இரண்டு இன்ஸ்டா பக்கங்கள் உள்ளது. Irfan’s View மற்றும் Irfan’s View Official என இரண்டு பக்கங்கள் வைத்துள்ளார். ஒன்றில் 9,81,000 மற்றும் 1.4 மில்லியன் பாலோவர்களும் உள்ளனர்.
இவர் தனது யூடியூப் பக்கத்தை 2009ம் ஆண்டு தொடங்கியுள்ளார், 4.29 மில்லியன் Subscriber வைத்துள்ளார்.
அதோடு அதில் 2445 வீடியோக்ளை இதுவரை ஷேர் செய்துள்ளார்.
திருமணம்
யூடியூபர் இர்பானுக்கு ஆலியா என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்தது. திருமண வீடியோக்களை அவரே யூடியூபில் வெளியிட்டு அதிக லைக்ஸ் பெற்றார்.
சொத்து மதிப்பு
ஒரு வீடியோவிற்கு மட்டும் சுமார் 2 முதல் 4 லட்சம் சம்பாதிக்கும் இவர் மாதம் ரூ. 15 முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பாதிக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. மொத்தமாக இவரது சொத்து மதிப்பு ரூ. 2.2 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.