ஆல்யா மானசா
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் ஆல்யா மானசா.
ராஜா ராணி என்று அவர் நடித்த முதல் சீரியலிலேயே ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். அதன்பின் திருமணம், குழந்தை என ஆனதால் கொஞ்சம் இடைவேளை எடுத்து பின் ராஜா ராணி 2 தொடரில் நடித்தார், பாதியிலேயே வெளியேறினார்.
அதன்பின் சன் டிவி பக்கம் வந்து இனியா என்ற தொடர் நடித்தார், அது முடிந்து சில மாதங்கள் ஆகிறது.

புதிய சீரியல்
நடிகை ஆல்யா மானசா கடந்த மே 27ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அன்று தான் ஜீ தமிழில் புதிய சீரியல் நடிக்க இருக்கும் விஷயத்தை வெளியிட்டார். தற்போது என்னவென்றால் தெலுங்கில் ஒளிபரப்பான Chamanthi என்ற தொடரின் தெலுங்கு ரீமேக்கில் தான் ஆல்யா மானசா நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற செய்தி உலா வருகிறது.
ஆனால் Chamanthi என்ற தெலுங்கு தொடர் ஜீ தமிழில் ரீமேக் ஆகிறது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
View this post on Instagram

