ராஜமௌலி
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். அதேபோல் தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட ஹிட் படங்களின் இயக்குனராக வலம்வருகிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி.
இயக்குனராக நமக்கு இவரைப்பற்றி தெரியும், ஆனால் இவர் ஹீரோவாக ஒரு படம் நடித்த விஷயம் தான் சமூக வலைதளங்களில் இப்போது வலம் வருகிறது.
என்ன படம்
ராஜமௌலி சிறுவனாக இருக்கும்போது அவரை முதன்மை கதாபாத்திரமாக வைத்து பிள்ளான க்ரோவி என்ற பெயரில் படம் தயாராகியுள்ளது. இப்படத்தை கீரவாணியின் தந்தை சிவசக்தி தத்தா இயக்கியுள்ளார், விஜயேந்திர பிரசாத் தயாரித்துள்ளார்.
படத்தை குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க நினைத்துள்ளனர், ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு நினைத்த பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்க முடியவில்லை, செலவு அதிகரித்துள்ளது.
மேற்கொண்டு பணத்தை போட வசதி இல்லை என்பதால் நிறுத்த வைக்க அதற்குள் படத்தில் நடித்த சிறுவர்கள் வளர்ந்துவிட படத்தை அப்படியே டிராப் செய்துவிட்டார்களாம்.