முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவை மறைமுகமாக தாக்குகிறாரா மைத்திரி

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அரச வீடுகளில் வசித்து வந்த முன்னாள் ஜனாதிபதிகள் அவ் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவ்வாறு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதிகளில் மகிந்த ராஜபக்சவும் ஒருவர்.அவர் வெளியேறிய போது அவரைச்சுற்றி பெரிய கூட்டம் அணி வகுத்து நின்றது.

இது தொடர்பில் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது தான் யாரையும் அழைத்து வரவில்லை என தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பில் உள்ள வீட்டில், ஊடகவியலாளர்கள் நேற்று திங்கட்கிழமை (15) சந்தித்தனர். அவர்கள் கேட்ட கேள்விக்கு மைத்திரிபால சிறிசேன அளித்த பதில் வருமாறு,

இரண்டொரு நாளில் நாங்கள் சென்றுவிடுவோம்

ஊடகவியலாளர்: உத்தியோகபூர்வ இல்லத்தை கைவிட்டு விட்டீர்கள் இப்போது எப்படி?

[

 மைத்திரிபால: “பொருட்களை ஏற்றுகிறோம், இரண்டொரு நாளில் நாங்கள் சென்றுவிடுவோம்”.

ஊடகவியலாளர்: இன்னும் கொழும்பு வீட்டில் தான் இருக்கின்றீர்கள்

மைத்திரிபால: “இல்லை, இல்லை, தங்கி இருக்கின்றீர்கள் என்றால், இன்னும் இரண்டொரு நாட்களுக்கு இருப்போம், பொருட்களை ஏற்றுகிறோம். இன்னும் சில வேலைகளை செய்யவேண்டியுள்ளது”.

ஊடகவியலாளர்: இது பழிவாங்கலா? இல்லையேல் நல்லதா?

மைத்திரிபால: ”முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டமாகும். அந்த சட்டத்தின் பிரகாரம், முன்னாளில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் அந்த சட்டத்தை ரத்து செய்து போக சொன்னார்கள் நாங்கள் போகிறோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை”.

[

மஹிந்த ராஜபக்ஷவை சுற்றி ஒரு பெரிய கூட்டம்

 ஊடகவியலாளர்: மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. உங்களுக்கு எப்படி

[

மைத்திரிபால: இல்லை… இல்லை… நான் யாரையும் அழைத்து வரமாட்டேன்.

ஊடகவியலாளர்: மஹிந்த ராஜபக்ஷவை சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடுவதை நாங்கள் கண்டோம். உங்களைப் பார்க்க யாரும் வரவில்லையா?

 மைத்திரிபால: இல்லை, இல்லை. நான் மக்களை அழைத்து வருவதில்லை.

ஊடகவியலாளர்: அதாவது, மக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர், இல்லையா?

மைத்திரிபால: நான் மக்களை அழைத்து வருவதில்லை என சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுவிட்டார். 

[

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.