நடிகர் சிம்பு
கொரோனா காலத்தை பயன்படுத்தி தனது உடல்எடை குறைத்து ஆளே மாறிய சிம்பு அதன்பின் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்தார்.
மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என நிறைய ஹாட்ரிக் வெற்றிகள் வெளியான நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.
தற்போது தல் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் சிம்பு நடித்துள்ள நிலையில் அவரது புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு சென்றுள்ள நடிகர் பிரேம்ஜி அமரன், எங்கே சென்றார்… போட்டோ இதோ
அடுத்த படம்
நடிகர் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்க டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளார்.
இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்புவின் கைகளில் புத்தகத்தில் ரத்தக்கறையுடன் மறைக்கப்பட்ட கத்தி இருப்பதாக காணப்பட்டது.
இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் நடிகர் சந்தானமும் நடிக்கிறார் என்கின்றனர்.