நடிகை சானியா மிர்ஸா பிரபல டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர். பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்பவரை 2010ல் திருமணம் செய்துகொண்ட அவர் கருத்து வேறுபாடு காரணமாக 2023ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அவருக்கு சானியா மிர்ஸா இரண்டாவது மனைவி என்பது பலருக்கும் தெரிந்த தகவல் தான்.
அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது மகன் உடன் சானியா மிர்ஸா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சோயப் மாலிக் ஏற்கனவே பாகிஸ்தானை சேர்ந்த சனா ஜாவித் என்ற நடிகையை மூன்றாம் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஜா படத்தை பார்த்த ஆஸ்கார் விருது வென்ற இயக்குனர்.. நடிகருக்கு அழைப்பு
தெலுங்கு நடிகர் உடன் டேட்டிங்?
சானியா மிர்ஸா இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அவர் பிரபல கிரிக்கெட் வீரரை இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக ஒரு தகவல் கடந்த பல மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது.
தற்போது சானியா மிர்ஸா ஒரு பிரபல தெலுங்கு நடிகர் உடன் டேட்டிங் செல்வதாகவும், அவர்கள் திருமணம் செய்யப்போவதாகவும் புதுத்தகவல் பரவி வருகிறது. இருப்பினும் அந்த நடிகர் யார் என்ற தகவல் இல்லை.
தெலுங்கு நடிகரை சானியா மிர்ஸா திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் உண்மை ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.