நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் படுபிஸியான ஹீரோவாக மாறி வருகிறார். அமரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது.
அட்லீ – SK கூட்டணி?
இந்நிலையில் இயக்குனர் அட்லீ சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் அடுத்து படத்திற்காக கூட்டணி சேர போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
அட்லீயின் முந்தைய படமான ஜவான் 1150 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து அவர் ஹிந்தியில் சல்மான் கானை வைத்து இயக்க இருந்த படம் டிராப் ஆகிவிட்டதாகவும் கடந்த சில தினங்களாக செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.
பில்லா அஜித்.. குட் பேட் அக்லீ டீசருக்கு ரசிகர்களின் ரியாக்ஷன்! இதை கவனித்தீர்களா