ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு வருகை தரவுள்ளதையடுத்து இஸ்ரேலில் இருந்து இந்நாட்டுக்கான விமான சேவைகளை நிறுத்த இஸ்ரேல் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அத்தோடு, இலங்கையில் இருந்து இஸ்ரேல் விமானத்தில் ஏறும் பயணிகளை உயர் பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் சிறப்பு பயிற்சி பெற்ற காவலர்களால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
இந்நிலையில், கடுமையான சோதனைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கையில் உள்ள விமானப் பொறியியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை!
ஈரான் அதிபரின் வருகை
அதேவேளை, இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லும் தாதியர் உள்ளிட்ட இலங்கையர்களுக்காகவே இந்த இஸ்ரேல் விமானம் இலங்கைக்கு வருகிறது.
அந்த விமானம் நிறுத்தப்பட்டதையடுத்து, துபாய் ஏர்லைன்ஸ் மூலம் பயணிகளை இஸ்ரேலுக்கு அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
எனினும், ஈரான் அதிபரின் வருகைக்குப் பிறகு விமான சேவைகள் வழமைக்கு திரும்பும் என்று நம்பப்படுகிறது.
ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
https://www.youtube.com/embed/yw1tKMpbJjg