ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வு, செப்டெம்பர் மாதத்தில்
நடைபெறவுள்ளது.
இதன்போது, இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று
பிரித்தானியாவும் கனடாவும், இலங்கையிடம் அறிவித்துள்ளதாக ஆங்கில
செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அந்த தீர்மானம் முன்னைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்போது கடுமையானதாக
இருக்காது என்று இலங்கை அரசாங்கத்தரப்பை கோடிட்டு, செய்தித்தாள் செய்தி
வெளியிட்டுள்ளது.
செம்மணிப் புதைகுழி
முன்னர் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய அமெரிக்கா,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில்,
இலங்கை தொடர்பான புதிய மையக் குழுவின் அமைப்பில் மாற்றம் ஏற்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் முன்னைய மையக் குழுவின் ஒரு
பகுதியாக இருந்த மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகியவை இந்த
ஆண்டு தீர்மானத்தில் பங்கேற்காமல் போகலாம் என்று இலங்கை அரசாங்கம்
தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் டர்க்,
செப்டெம்பர் 8ஆம் திகதியன்று இலங்கை தொடர்பான தமது அறிக்கையை
சமர்ப்பிக்கவுள்ளார்.
ஏற்கனவே, செம்மணிப் புதைகுழியை பார்வையிட்டுள்ளபடியால், இலங்கை தொடர்பான தனது
அறிக்கையில் முக்கியமாக அந்த புதைகுழி இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் இலங்கை
அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.