முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எதிர்பாராத திருப்புமுனை…! ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த கடும் எச்சரிக்கை

ஈரான் மீது இதுவரை தாக்குதல் நடத்தாத இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்த போகிறோம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த எச்சரிக்கையினை இஸ்ரேல் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி விடுத்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிசேரியாவில் உள்ள வீட்டிற்கு எதிரான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானுக்கு எதிரான மற்றொரு பதிலடி தாக்குதலை நடத்த இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஈரானின் அணு உலகைகள் மீது தாக்குதல்

அதன்படி, இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

இதனால் ஈரானின் அணு உலகைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

எதிர்பாராத திருப்புமுனை...! ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த கடும் எச்சரிக்கை | Israel Biggest Warning To Iran

பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் இந்த நிழல் யுத்தம் ஒரு நேருக்கு நேர் இராணுவ மோதலாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

ஈரான் அளித்துள்ள புகார்

இந்த நிலையில் சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) தங்களின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்க வாய்ப்பு உள்ளதாக ஈரான் புகார் வைத்துள்ளது.

அணுசக்தி தளங்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயல்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது. இதை அனுமதிக்க கூடாது என்று ஈரான் புகார் வைத்துள்ளது.

எதிர்பாராத திருப்புமுனை...! ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த கடும் எச்சரிக்கை | Israel Biggest Warning To Iran

அத்துடன், இது தொடர்பாக ஈரான் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக்குழுவுக்கு முறையான கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

எதிர்பாராத திருப்புமுனை...! ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த கடும் எச்சரிக்கை | Israel Biggest Warning To Iran

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நேரம் உள்ள நிலையில் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் வெடிக்க போவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்