லெபனானில் (Lebanon) மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 450 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெய்ரூட்டின் (BEIRUT) தென்பகுதியில் உள்ள டகியேவில் இறுதி நிகழ்வில் ஹெஸ்புல்லா (Hezbollah) உறுப்பினர்கள் உட்பட மக்கள் கலந்துகொண்டிருந்த வேளை வெடிப்புசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
துப்பாக்கிச்சூடு போன்றும் வெடிப்புகள்
கடந்த செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 15:45 மணியளவில் (13:45 BST) லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேஜர்கள் வெடிக்கத் தொடங்கின. வெடிப்புகளில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 உயிரிழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்தனர்
பட்டாசுகள் போன்றும் துப்பாக்கிச்சூடு போன்றும் சிறிய வெடிப்புகள் நிகழ்வதற்கு முன்னதாக, சிலரில் பாக்கெட்டுகளில் இருந்து புகை வருவதைக் கண்டதாக சாட்சிகள் தெரிவித்தனர்.
ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் வோக்கிடோக்கிகள் வெடித்து சிதறியதால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
வீதிகளில் வெடிப்புசத்தங்கள்
இந்நிலையில் மீண்டும், பேஜர்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் இறுதிநிகழ்வுகளின் போது ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துள்ளன.
நபர் ஒருவர் நிலத்தில் விழுந்து கிடப்பதையும் மக்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் சைபர் தாக்குதல் என்று அரேபிய செய்திகளை மேற்கோள்காட்டி லெபனான் குற்றம்சாட்டியுள்ளது.
லெபனான் – சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஹிஸ்புல்லா அமைப்பு தங்களுக்கு எதிராக ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/Dpz1Nlz9dJw