இஸ்ரேல் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க (USA) வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken) இஸ்ரேலுக்கு (Israel) விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, எகிப்து (Egypt) மற்றும் கத்தார் (Qatar) நாடுகளின் மத்தியஸ்தர்கள் இணைந்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளியன்று தோஹாவில் இஸ்ரேலிய தூதுக்குழுவை சந்தித்து போர்நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான புதிய புதியக்கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
அந்தவகையில், சமீபத்திய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் பிறகு, இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் நோக்கில், தனது வெளியுறவுத் துறை செயலாளரை இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலிய பிரதமர்
அதன்படி, பிளின்கன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் அத்துடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கடந்த மே மாதம் ஜோ பைடன் முன்மொழிந்த போர் நிறுத்தத்த உடன்படிக்கைக்கு தாம் விரும்புவதாகவும் புதிய நிபந்தனைகளுடனான ஒப்பந்தத்ததை தாம் நிராகரிப்பதாகவும் ஹமாஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், போர்நிறுத்தப் பேச்சு வார்த்தைகள் குறித்து தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அதற்காக தமது குழு செயற்படுவதாகவும் ஜோ பைடன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும், காசா (Gaza) போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா (USA) நடுநிலையாக செயல்படவில்லை என போர் நிறுத்தப் பேச்சுவார்தையில் ஈடுபட்டட ஈரானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனி (Minister Ali Bagheri Kani) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.