முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலியப் படைகள் காசாவில் கோர தாண்டவம்: 400யை கடந்தது பலி எண்ணிக்கை

இஸ்ரேலியப்(IDF) படைகள் காசா மீது நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 400யை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் காசா மற்றும் லெபனானில் தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அத்துடன், இரு தரப்பும் பணய கைதிகளை விடுவித்து வந்தன.

இஸ்ரேலியப் படையின் தாக்குதல்

அந்த வகையில், இன்னும் சில நாள்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், இஸ்ரேல் இன்று(18) காசா மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலியப் படைகள் காசாவில் கோர தாண்டவம்: 400யை கடந்தது பலி எண்ணிக்கை | Israel Hamas War 400 Palestinians Killed

இந்தத் தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் 660க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகப் பாலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, இந்தத் தாக்குதல்களில் காசாவின் துணை உள்துறை அமைச்சர் மஹ்மூத் அபு-வஃபாவும் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரதமர் நெதன்யாகுவின் பதிவு

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து பதிவிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu) “காசா பணய கைதிகளை விடுவிக்காததே இந்தத் தாக்குதலுக்கு காரணம்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜனவரி 19 ஆம் திகதி போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து காசா பகுதியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்