இஸ்ரேலில் (israel) ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதன் ஓராண்டு நிறைவில் காஸா, லெபனான் ஆகிய இரு பிரதேசங்களிலும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை முடுக்கிவிட்டதால் லெபனான் ” காசா போன்ற அழிவை” சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) செவ்வாயன்று எச்சரித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பினரை லெபனானை விட்டு வெளியேறும் வரை போர் முடிவடையப் போவதில்லை என்றும் அந்த அமைப்பின் தலைவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரை இஸ்ரேல் கொன்றுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சகம்
இஸ்ரேல் நேற்று (9.10.2024) செவ்வாய்க்கிழமை ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆயிரக்கணக்கான இராணுவத்தை தென்மேற்கு லெபனானை நோக்கி அனுப்பியுள்ளது. இந்நிலையில், லெபனானில் கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் உயிரிழந்ததுடன்150 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் 137 வான்வழி தாக்குதல்களை கடந்த 24 மணிநேரத்தில் நடத்தியது பதிவாகி உள்ளதுடன், இதுவரை மொத்தம் 9,400 தாக்குதல்கள் நடந்துள்ளனதாக லெபனான் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சரான நாசர் யாசின் தெரிவித்துள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் இதுவரை நடத்திய வான்வழி தாக்குதலில் மொத்தம் 2,119 பேர் பலியாகி உள்ளதுடன் 10,019 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் பின்னர் புதிய தலைவராக பதவியேற்க இருந்த ஹசீம் சபிதீனும் (Hashem Safieddine) இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் (Yoav Gallant) உறுதிபடுத்தியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்
இந்தநிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டின் (Yoav Gallant) அமெரிக்க பயணத்தை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தடுத்துள்ளார்.
கடந்த வாரம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி தொடர்பில் பேசுவதற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டினை (Lloyd Austin) சந்திப்பதற்கு கேலண்டின் திட்டமிடப்பட்ட பயணம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி ஜோ பைனுடன் தொலைபேசி அழைப்பை பெறும் வரையில் கையொப்பமிட மறுத்ததால் இந்த பயணம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கேலண்ட் வெளியேறுவதற்கு முன்பு ஈரானின் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட பதிலடிக்கு பாதுகாப்பு அமைச்சரவை இறுதி ஒப்புதல் பெற வேண்டும் என்றும் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/unlFMItVVEs