இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் மீதான ஈரான் ஆதரவு ஹவுதிகளின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாரிய பதில் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலானது, ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான Hodeidah மீது நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளதுடன், டெல் அவீவ் நகரம் மீது ஹவுதிகள் முன்னெடுத்த தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் பலி
அதன் படி, Hodeidahதுறைமுக நகரத்தில் உள்ள எண்ணெய்க் கிடங்குகள் மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஒன்றின் மீதும் இந்த பயங்கர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலிலன் தாக்குதலினால் உயிர் பலி ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவ அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர்.
நேரடியான தாக்குதல்
எனினும், குறித்த தாக்குதலினால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.
அத்துடன், காசா மீதான போருக்கு பின்னர் ஹவுதிகளுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுக்கும் நேரடியான முதல் தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.