இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகியது.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.மேலும், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச்
சென்றனர்.
இலங்கையில் சடுதியாக உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை…!
பதவி விலகல்
அன்றிலிருந்து இன்றுவரை ஏழு மாதங்களாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் அமைப்பினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தோல்வியும் முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை உயர்அதிகாரிகளும் பொறுப்பேற்று தங்களது பதவியிலிருந்து பதவி விலகாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணிப் பெண்: வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை
இஸ்ரேல் இராணுவம்
இஸ்ரேல் இராணுவத்தின் தலைசிறந்த பாதுகாப்பு அமைப்பை முறியடித்து இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தடுக்க முடியாததற்கு தான் பொறுப்பேற்பதாக தாக்குதல் நடைபெற்ற பிறகு ஹலிவா தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்: இன்றைய தங்க நிலவரம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |