ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள இஸ்பஹான் நகரின் வடகிழக்கே ஈரானிய இராணுவ விமான தளத்திற்கு அருகே மூன்று சிறிய அறியப்படாத பறக்கும் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவிரவும் இந்த இராணுவ விமான தளத்திலுள்ள சில பொருட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய தளபதி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்தத் தாக்குதல் ஈரானியர்களைத் தூண்டிவிடுமா இல்லையா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “ஈரானின் பதிலை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
சத்தமின்றி பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்…அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!
பயணத் தடை
இந்தநிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஊழியர்கள் நடமாடுவதை கட்டுப்படுத்துமாறு கூறியுள்ளது, ஈரானுக்குள் இஸ்ரேல் நடத்திய பழிவாங்கும் தாக்குதலை தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்பொருட்டு, அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு டெல் அவிவ் பகுதிக்கு வெளியே தனிப்பட்ட பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அதே போல் ஜெருசலேம் மற்றும் பீர்ஷேவா பகுதிகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் அதிபரின் இலங்கை விஜயம்: பலப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு
ஊடுருவலை நோக்கி
இஸ்ரேலில் நிலவரம் இவாறிருக்கையில், உடனடியாக பதிலடி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார், இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லாததால் ஈரான் சற்று நிதானம் பேணி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் வெளிநாட்டு செயற்பாடுகள் இருப்பதாக எந்த ஆதாரமும் உறுதிப்படுத்தப்படவில்லை, அதே சமயம் நாங்கள் எந்த வெளிப்புற தாக்குதலையும் பெறவில்லை. மேலும் இந்த சம்பவம் தாக்குதலை விட ஊடுருவலை நோக்கியே சாய்ந்துள்ளதாக தோன்றுகிறது,” என்று பெயர் தெரியாத நிலையிலான ஒரு கருத்தை அந்த அதிகாரி முன்வைத்திருந்தார்.
அதேசமயம், இந்தத் தாக்குதலுக்கு, இதுவரை இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்காமல் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அமெரிக்காவில் ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |