முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரிய தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: காசாவில் வைக்கப்பட்டது அடுத்த குறி

காசாவில் (Gaza) ரபா நகரில் மிகப்பெரிய அளவில் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் (Israel)  இராணுவம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இந்த மாத தொடக்கத்தில் முடிவுக்கு வந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

அத்துடன், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்து, ஹமாஸ் அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை சமர்ப்பித்துவிட்டு காசாவில் இருந்து வெளியேறாவிட்டால் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

பணயக் கைதிகளின் விடுவிப்பு

அதேநேரம், போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படைகளின் வெளியேற்றத்திற்கு ஈடாக, மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.

பாரிய தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: காசாவில் வைக்கப்பட்டது அடுத்த குறி | Israel Planning Attack On Gaza S Rabaa City

ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் சிக்கிய மீதமுள்ள 59 பணயக் கைதிகளில் தற்போது 24 பேர் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

இஸ்ரேல் இராணுவத்தின் உத்தரவு

இந்த நிலையில், காசாவில் உள்ள ரபா நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

பாரிய தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: காசாவில் வைக்கப்பட்டது அடுத்த குறி | Israel Planning Attack On Gaza S Rabaa City

ரபா நகரில் மிகப்பெரிய அளவில் தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம், ரபா நகரில் இஸ்ரேல் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நிகழ்த்தியிருந்த நிலையில் இன்று ரமழான் பண்டிகை தினத்தில் ரபா நகர மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்