காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் கீழ் இருந்த பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்க தவறியதற்காக நாட்டு மக்களிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மன்னிப்பு கோரியுள்ளார்.
ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேல் (israel) இராணுவத்தினர் காஸா (gaza) நிலத்தடி சுரங்கப் பாதையில் இருந்து மீட்டது இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாடெங்கும் போராட்டங்களை நடத்தினார்கள்.
பொதுமக்கள் எதிர்ப்பு
டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் இதர நகரங்களில் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டு அரசு, ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்டோபர் 7ம் திகதி தாக்குதலின் போது பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகத் தொடங்கிய பெரும் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இஸ்ரேலின் பிரதான தொழிற்சங்கம் தேசிய வேலை நிறுத்தமொன்றை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
https://www.youtube.com/embed/nMWrgJ2iBkY