ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) காசாவில் (Gaza) நீண்ட நாட்களாக காணாமல் போயுள்ளார், இதனால் அவர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் (Israe) தெரிவித்து வருகிறது.
அத்தோடு, சமீபத்திய தாக்குதல்களில் சின்வார் கொல்லப்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் அறிவித்துள்ளன, ஆனால் இதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.
இதேவேளை, இஸ்ரேலின் உளவு அமைப்பான ஷின் பெட், சின்வார் இன்னும் உயிரில் இருக்கலாம் எனக் கூறுகிறது.
இஸ்ரேலின் குறி
இந்ந நிலையில், இஸ்ரேலில் கடந்த வருடம் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னணியாக சின்வார் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவருடன், ஹமாஸ் ராணுவத் தலைவர் முஹம்மது டெயிப் மற்றும் கான் யூனிஸின் ரபா சலாமே உள்ளிட்டவர்களை இஸ்ரேல் குறி வைத்துள்ளது.
ஹனியே படுகொலை
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் மற்றும் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் துணைத் தலைவர் சலே அல்-அரூரி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
எனினும், இஸ்ரேலியப் படைகளால் தேடப்பட்ட முக்கிய நபர்களாக இருந்த யஹ்யா சின்வாரும் அவரது சகோதரர் முஹம்மதுவும் இதுவரை இஸ்ரேலின் கண்களில் படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.