முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹிஸ்புல்லாவை குறிவைத்த இஸ்ரேல் தாக்குதல் : 12 பேர் பலி

கிழக்கு லெபனானில் (Lebanon) நேற்று (15.07.2025) மேற்கொண்ட இஸ்ரேலின் (Israel) கடுமையான வான்வழித் தாக்குதலில் ஐந்து ஹிஸ்புல்லா (Hezbollah) போராளிகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் ஈரானின் ஆதரவு பெற்ற குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு அப்பகுதியில் தன்னை மீண்டும் நிலைநிறுத்த முயற்சிப்பதற்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாகும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

மேலும் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை, லெபனான் பாதுகாப்பு வட்டாரம் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாவுக்கு பெரும் இழப்பு

இஸ்ரேலிய இராணுவம், பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு போராளிகள் பயன்படுத்தும் பயிற்சி முகாம்களையும், ஆயுதங்களை சேமிக்கும் கிடங்குகளையும் இந்த வான்வழித் தாக்குதல்கள் குறி வைத்ததாகத் தெரிவித்தது.

ஹிஸ்புல்லாவை குறிவைத்த இஸ்ரேல் தாக்குதல் : 12 பேர் பலி | Israel Targets Hezbollah In Lebanon Kill 12

கடந்த நவம்பர் மாதம் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் அப்பகுதியில் நடந்த மிகவும் பயங்கரமான தாக்குதல்களாகும்.

பெக்கா பிராந்தியத்தின் ஆளுநரான பஷீர் கோதர், உயிரிழந்தவர்களில் ஏழு பேர் சிரிய நாட்டவர்கள் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு நடந்த மோதலில், இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது.

அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் பிற தளபதிகள் கொல்லப்பட்டனர், மேலும் அதன் ஆயுதக் கிடங்கின் பெரும் பகுதி அழிக்கப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்