முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள்

ஹிஸ்புல்லாவின் (Hezbollah) முக்கிய தலைவர்களில் ஒருவரான வஃபிக் சஃபாவை குறிவைத்து இஸ்ரேல் (Israel) நடத்திய வான்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவுக்கு (Gaza) ஆதரவாக ஹிஸ்புல்லா குழு செயற்பட்டுவரும் நிலையில் நேற்றையதினம் (11.10.2024) இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

பெய்ரூட்டில் (Beirut) நடந்த பேஜர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

தரைவழி தாக்குதல்

மேலும், இந்த போர் காரணமாக சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உள்ள நிலையில் தரைவழி தாக்குதலிலும் இஸ்ரேல் அதிரடியாக இறங்கியுள்ளது.

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள் | Israeli Airstrikes Hezbollah Leaders Lebanon

இதனால் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா (United States), பிரான்ஸ் (France), இங்கிலாந்து (England) உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லெபனான் (Lebanon) தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

முக்கிய தளபதிகள்

நூற்றுக்கணக்கான குண்டுகள், ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள் | Israeli Airstrikes Hezbollah Leaders Lebanon

இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவரான அந்த அமைப்பின் வஃபிக் சஃபா என்பவர் இஸ்ரேலுக்கு எதிராக முக்கிய திட்டங்களை வகுத்துக் கொடுப்பதோடு, பிற நாடுகளை தொடர்பு கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

இதனை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் கண்டறிந்த நிலையில் வஃபிக் சஃபா குறிவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டது.

வான்வழி தாக்குதல் 

பெய்ரூட்டில் வஃபிக் சஃபா மறைந்திருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்ததையடுத்து நேற்று இரவு முதல் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள் | Israeli Airstrikes Hezbollah Leaders Lebanon

இந்த தாக்குதலில் வஃபிக் சஃபா உயிர்தப்பியதுடன், குறித்த தாக்குதலினால் 22 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

காசா மற்றும் லெபனான் மீது அப்பட்டமான மனித உரிமை மீறலை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும், அந்நாடு மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்களை செய்து வருவதாக ஐநா (United Nations) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.