காசாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
காசாவின் வடக்கு பகுதியை கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் தற்போது களமிறங்கி இருக்கும் நிலையில், தற்போது அதன் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ஆதாரங்களின் தகவல்படி, காசாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கான் யூனிஸில் இடம்பெயர்ந்தவர்கள் முகாம் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

