இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் காசாவில் (Gaza) 140-க்கும் மேற்பட்டோரும், லெபனானின் (Lebanon) ஒரே நாளில் 77 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் – பலஸ்தீனம் (Palestine) இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும், நிலையில் கடந்த ஆண்டு முதல் காசா, லெபனான் உள்ளிட்ட நாடுகளின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் போர் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் விமானங்கள்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அங்கு இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 140-க்கும் மேற்பட்டோரும், லெபனாரின் ஒரே நாளில் 77 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்
ஈரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு தற்போது இஸ்ரேலின் பார்வை காசா மற்றும் லெபனான் மீது மீண்டும் திரும்பி உள்ளது.
அங்கு மீண்டும் தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தின் கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.
மேலும், சிடோன் நகருக்கு அருகிலுள்ள சரஃபாண்ட் மற்றும் ஹரேட் சைடாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாயன்று காசா முழுவதும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 143 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 132 பேர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் காசாவின் வெஸ்ட் பேங்க் பகுதி முழுவதும் இஸ்ரேல் படை தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.