முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்ணை மறைத்த அழகு : ஈரானை அலறவிட்ட இஸ்ரேலின் பெண் உளவாளி

ஈரான் (Iran) – இஸ்ரேல் போர் அதி உச்சத்தை அடைந்துள்ள நிலையில், தற்போது பல ஹாலிவுட் படங்களில் நடப்பது போன்ற ஒரு சம்பவம் ஈரானிலும் அறங்கேரியுள்ளது.

ஈரானின் பல தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாகக் கருதிய நிலையில், இஸ்ரேல் அவர்களை குறிவைத்துத் தாக்கியது. 

இது எவ்வாறு சாத்தியமானது என ஆராயும் போது தான், அதன் பின்னணியில் ஒரு பெண் மொசாட் உளவாளி இருந்ததை ஈரான் தாமதமாகவே அறிந்து கொணட்து.

இஸ்ரேல் – ஈரான் சண்டை

ஈரானுக்குள் நுழைந்து முக்கிய தலைவர்கள், உயர் அதிகாரிகளின் வீட்டுக்குள் நுழைந்த இஸ்ரேலின் பெண் உளவாளி பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கண்ணை மறைத்த அழகு : ஈரானை அலறவிட்ட இஸ்ரேலின் பெண் உளவாளி | Israeli Female Deadly Spy Who Shook Iran

இஸ்ரேல் – ஈரான் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடந்த உலகை உலுக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றாக வைரலாகி வருகிறது.

ஈரானின் அணு விஞ்ஞானி என கருதப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே-வை, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் எவ்வாறு AI ரோபோ உதவியுடன் படுகொலை செய்தது என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று மொசாட்டின் அரக்கி என்று கூறப்படும் அளவுக்கு வேலை செய்த பெண் உளவாளி பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மொசாட்டின் பெண் உளவாளி 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மொசாட்டின் பெண் உளவாளி காத்தரின் பெரஸ் ஷக்தாம், ஈரானுக்குள் ரகசியமாக நுழைகிறார்.

கண்ணை மறைத்த அழகு : ஈரானை அலறவிட்ட இஸ்ரேலின் பெண் உளவாளி | Israeli Female Deadly Spy Who Shook Iran

ஷியா முஸ்லிமாக மதம் மாறும் காத்தரின், ஈரான் உயர் தலைவர்களின் குடும்பப் பெண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்.

உண்மையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவராக காத்தரின், மிகச் சிறப்பானப் பயிற்சி பெற்றவர் மட்டுமல்ல, பிறப்பிலேயே புத்திசாலித்தமான, அழகான, தைரியமான பெண்ணாகவும் இருந்தார். 

அவரது புத்திசாலித்தனமும் அழகும், அனைவரையும் முட்டாளாக்குகிறது. முதலில் முஸ்லிம் மதத்தின் மீது ஈடுபாடு கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்கிறார். 

ஷியா மதத்துக்கு மாறுகிறார் பின்னர் உயர் தலைவர்களின் மனைவிகள் வரும் இடங்களுக்குச் சென்று நட்பு பாராட்டி, அவர்களது வீட்டுக்குள் விருந்தினராக நுழைவதுடன் முழு நம்பிக்கையையும் பெறுகிறார்.

முக்கிய தலைவர்கள்

அரசு தலைவர்களின் வீடுகளில் அதுவும் வெளியாட்கள் நுழையத் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள்ளும் தடையின்றி நுழைகிறார்.

கண்ணை மறைத்த அழகு : ஈரானை அலறவிட்ட இஸ்ரேலின் பெண் உளவாளி | Israeli Female Deadly Spy Who Shook Iran

இந்த நிலையில் தான் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது, யாரும் எதிர் பார்க்காத ஒரு தாக்குதலும் கூட அது.

ஈரான் – இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். ஆனால், இஸ்ரேல் அவர்களை குறிவைத்து தாக்குகிறது. 

அவர்கள் கொல்லப்படுகிறார்கள். ஈரானுக்கு ஒன்றும் புரியவில்லை. துல்லியமான வரைபடத்தை யாரோ கொடுத்திருப்பது போல ஈரானுக்கு தோன்றுகிறது.

ஈரானின் புலனாய்வு அமைப்புகள்

ஈரானின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை முடுக்குகிறது. உண்மை வெளிவருகிறது. அரசு அதிகாரிகள், முக்கிய தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மூலம் காத்தரின் அடையாளம் காணப்படுகிறார்.

ஈரானிய புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியபோதுதான், அனைத்து தொலைபேசிகள் மற்றும் சிசிடிவி கேமராக்களில், காத்தரின் சப்தமே இல்லாமல் புகைப்படங்கள் எடுத்து ரகசியத் தகவல்களை நேராடியாக மொசாட்டுக்கு அனுப்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கண்ணை மறைத்த அழகு : ஈரானை அலறவிட்ட இஸ்ரேலின் பெண் உளவாளி | Israeli Female Deadly Spy Who Shook Iran

ஆனால் அதெல்லாம் காலம் கடந்துவிட்டதையே காட்டியது. யாருக்கும் தெரியவில்லை. கேத்தரின் எங்கிருந்து வந்தார், எங்கே சென்றார்? நாடு முழுவதும் கேத்தரின் புகைப்படங்கள் போஸ்டர்களில் ஒட்டப்படுகிறது. 

தேடப்படுவதாகவும் தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. யாருக்குத்தான் தெரியும். ஈரான் உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கே தெரியாத கேத்தரின் பற்றி சாமானிய மக்கள் எங்கே தெரிந்துவைத்திருக்க முடியும்.

அவர் எங்கே, எப்படி ஈரானிலிருந்து தப்பிச் சென்றார்? என்ற எந்த தடயமும் இன்றி மறைந்துபோயிருந்தார்.

ஈரான் அவரை வலைவீசி தேடிக்கொண்டிருந்த அதே வேளையில், வேறொரு நாட்டில் வேறொரு பெயரில் வேறொரு அடையாளத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என தெரிய வருகிறது.

ஈரானில் அவர் இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லாவிட்டாலும், ஈரான் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.