காசா முனையில் நடத்திய தாக்குதலில் ஹமாசின் தலைமை ஆயுத நிபுணர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாசின் ஆயுத தயாரிப்பு தலைமையகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டு பொறுப்பாளர் முகமது சாலா (Mohammed Salah) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
புலனாய்வு அடிப்படையில் ரபா பகுதி மீதான இலக்கு தாக்குதல் தொடரும் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பயங்கர தாக்குதல்
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் (07) ஆம் திகதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 1200 பேர் கொல்லப்பட்டதுடன், 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 37600 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.