எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் கோரியுள்ளார்.
நேற்றைய தினம் தனது பணிமனையில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை விடுத்தார்.
மேலும், மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் அமைந்திருப்பதாலேயே முல்லைத்தீவு சம்பவம் போன்ற பல தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
சிலருக்கு அசௌரியங்கள்
இதை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கிழக்கில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்.
இதனை நோக்கமாகக் கொண்டே கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். சிலருக்கு அசௌரியங்கள் இருக்கலாம்.
ஆனால் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நமது ஒற்றுமையை எடுத்துக் காட்டும் விதமாக இந்த கடையடைப்பு அமைய வேண்டும்.
இராணுவம் முகாம்களுக்கு திரும்ப வேண்டும்
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கூட இராணுவம் பெரிய முகாம்களுக்கு திரும்ப வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.
ஆனால் அது இதுவரை நிகழவில்லை. அதுவும் மோசமான விசாலிப்புகளே நடைபெறுகின்றன.
எனவே எதிர்வரும் 18ஆம் திகதி – திங்கட்கிழமை பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெறும் இந்தக் கடையடைப்பு போராட்டத்துக்கு மக்கள் அனைவரும் ஆதரவூ தர வேண்டும் என சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.