முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டக்ளஸ் சந்திப்பால் கொந்தளிக்கும் சாணக்கியனின் தீவிர ஆதரவாளர்கள்

டக்ளஸ் – சிவஞானம் சந்திப்பை தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் கூட கடுமையாக கொந்தளிப்பதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஆயுட்கால தொண்டரான அன்பின் செல்வேஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவை, இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவரான சீ.வி.கே சிவஞானம் சந்தித்து கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து, உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு பின்னர் தமிழ் தேசிய அரசியல் தரப்பில் இவ்விடயம் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

உண்மையில், இலங்கை தமிழரசுக்கட்சி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்துள்ளது என்ற விடயம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

கட்சியின் தீர்மானம் 

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர், எம்.ஏ. சுமந்திரன் எந்தத் தரப்புடனும் தமிழரசுக் கட்சி கூட்டாட்சிக்கு இணங்கவேயில்லை என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சுமந்திரன், “தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு சிறீதர் திரையரங்கில் இடம்பெற்றது.

எங்கள் அரசியல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவான, எந்தெந்த சபைகளில் தமிழ்க் கட்சிகள் அதிகூடிய ஆசனங்களை பெற்றிருக்கின்றனவோ அந்த கட்சிக்கு சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பி. ஆதரவளிக்க வேண்டும்.

எந்தெந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சிக்கு அதிகூடிய ஆசனங்கள் உள்ளதோ அங்கே தமிழரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதையே அவர் சந்திப்பில் வெளிப்படுத்தினார்” எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், டக்ளஸ் – சிவஞானம் சந்திப்பால் தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் கடுமையாக எதிர்ப்பு இருப்பதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஆயுட்கால தொண்டரான அன்பின் செல்வேஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.