எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்கும் தமிழரசு கட்சியும் மற்றும் பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்பவர்களும் ஜனாதிபதியிடம் இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டவர்கள்தான் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை மட்டக்களப்பில் (Batticaloa) அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முயற்சித்தவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதனை யாரும் மறுக்க முடியாது.
பொருளாதாரக் கொள்கை
தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொருளாதாரக் கொள்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களை பார்த்தால் அமெரிக்க (United States) ஜனாதிபதியினால் கூட இவ்வாறு தயாரித்திருக்க முடியாது.
பெறப்பட்ட கடன்களை மீள அடைக்க வேண்டும் அத்தோடு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட படி அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை நிறுத்திவிட்டால் பெறப்பட்ட கடனை அடைக்க முடியுமா ? ஆகையால் பொருளாதாரத் திட்டத்தை அறிவிக்கும் படி ஜனாதிபதி கூறியுள்ளார்.
சஜித்துக்கு ஆதரவு
பொறப்பட்ட கடன்களை அடைக்காமல் எவ்வாறு வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் எவ்வாறு கொடுப்பது அத்தோடு கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலையே வரும் இதனை எல்லாம் மக்கள் நன்கு சிந்திக்க கூடியவர்கள்.
எனவே, 21 அவர்கள் நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள் இதனாலேயே நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவினை வழங்கி வருகின்றோம்.
சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தமிழரசு கட்சியும் பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்பவர்களும் ஜனாதிபதியிடம் இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டவர்களே தான் அதன்பின் மாறியவர்களும் உண்டு இவர்களுக்கிடையே சரியான நிலைப் பாடு எதுவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.