முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈபிடிபியுடன் கைகோர்த்த தமிழரசு : கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் சந்திரசேகர்

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட, துரோகியென
முத்திரைகுத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்ந்து சாக்கடை
அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது
கிழிந்துவிட்டது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

யாழ். சாவக்கச்சேரியில் (Chavakachcheri) நேற்று (14.06.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த
அணுகுமுறையை இவ்விடயத்தில் நாம் வடகிழக்கில் கடைப்பிடிக்கவில்லை.

தமிழ்க் கட்சிகளின் கனவு

இங்கு நடுநிலை
வகித்தோம்.

நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு
சிதைக்கப்படும். மனக்கோட்டை, மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க
விரும்புகின்றோம்.

ஈபிடிபியுடன் கைகோர்த்த தமிழரசு : கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் சந்திரசேகர் | Itak Joins With Epdp To Form Govt Min Chandrasekar

இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம். மக்களுக்கு சேவை செய்வதே எமது முதன்மை நோக்கமாகும். உள்ளூராட்சி சபைகள் ஊடாக
மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது
உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள்.

யாழ். மாநகர மேயர்

அதேபோல ஊழல், மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கும்
எமது உறுப்பினர்கள் செயற்படுவார்கள். மக்களை ஏமாற்றும் அரசியலை நாம்
முன்னெடுக்கவில்லை. சாக்கடை அரசியல் செய்யவும் தயாரில்லை. அவ்வாறு செய்ய
நினைத்திருந்தால் யாழ். மாநகரில் இன்று வேறொரு நபரே மேயராக வந்திருக்கக்கூடும்.

ஈபிடிபியுடன் கைகோர்த்த தமிழரசு : கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் சந்திரசேகர் | Itak Joins With Epdp To Form Govt Min Chandrasekar

கடந்த காலங்கள் முழுவதும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட, துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட, ராஜபக்சக்களின் காலை நக்கி
பிழைக்கின்றவர் எனக் கூறப்பட்ட, மக்களுக்கு எதிராக அராஜாங்களை
கட்டவிழ்த்துவிட்டவர், ஊடகவியலாளர்களைக் கொன்றவர் எனக்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேரும் நிலைமை காணப்படுகின்றது. இதனை
மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளனர் ” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.