திருகோணமலையில் (Trincomalee) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண
நிகழ்வு இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தலைமையில், உவர் மலையில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி (ITAK) மாவட்ட காரியாலயத்தில் இன்று (08) இந்த நிகழ்வு நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி
சார்பில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட்ட 36 உறுப்பினர்கள் சட்டத்தரணி கேதவராசா முன்னிலையில் இவ்வாறு சத்தியப் பிரமாணம்
செய்து கொண்டனர்.
உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
திருகோணமலை மாநகர சபை, பட்டணம் சூழலும் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை,
தம்பலாகமம், பிரதேச சபை,
வெருகல் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை மற்றும் மொரவெவ பிரதேச சபை ஆகிய
உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களே சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.குகதாசன், ”வெருகல் பிரதேச சபையில் தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி
அமைப்போம்.
அதைத் தவிர திருகோணமலை மாநகர சபை, பட்டணம் சூழலும் பிரதேச சபை,
குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை ஆகியவற்றிலும் எமது கட்சி ஆட்சி
அமைக்கும்.
அத்துடன் மொரவெவ, தம்பலாகமம், சேருவில போன்ற இடங்களில் ஆட்சி அமைப்போருக்கு உதவி
செய்வோம்” என தெரிவித்தார்.