கடையடைப்பு போராட்ட அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் (Bimal Rathnayake) உள்ளிட்டவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம். ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, யாழ்ப்பாணம் (Jaffna) தவிர ஏனைய இடங்களில் கடையடைப்பு போராட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கட்சி அழைப்பு
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து
ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு
கிடைத்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள்
திறந்திருந்தது, அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே.
இராணுவ முகாம்
எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி , அமைச்சர் பிமல்
உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர்.

முத்துஐயன்கட்டு
இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள் இதுவே வெற்றி.
இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை
அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
https://www.youtube.com/embed/BYBnpmsaLIkhttps://www.youtube.com/embed/6nccQBWc_8I

