முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி!

புதிய இணைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்.மாவட்டத்தில் உள்ள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு
மனுக்களை இன்று (20) தாக்கல் செய்துள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி
அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன்
முன்னிலையில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்றைய தினம் (19) யாழில் உள்ள 05 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்
செய்யப்பட்டதுடன் இன்று ஏனைய12 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில்17
உள்ளூராட்சி சபைகளுக்கான முதன்மை வேட்பாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி! | Itak Party Files Election Nomination In Jaffna

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு
போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி வவுனியாவில் இன்று (20) கையளித்துள்ளது.

வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை,
வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை நேற்றைய தினம் (19) தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வேட்புமனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வேட்பாளர்கள்,
ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் கையளித்திருந்தனர்.

யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி! | Itak Party Files Election Nomination In Jaffna

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில்(Jaffna) உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழரசுக்
கட்சி இன்று(19) தாக்கல் செய்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும்
போட்டியிடுகின்றது.

இதற்கான வேட்பு மனுக்களை கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ
சுமந்திரன் தலைமையில் இன்று(19) காலை கிழக்கு மாகாணத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள்

இதனைத் தொடர்ந்து, வடக்கில் யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான
வேட்பு மனுக்களை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று மாலை தாக்கல்
செய்துள்ளது.

யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி! | Itak Party Files Election Nomination In Jaffna

மேலும், குறித்த வேட்பு மனுக்கள் கட்சியின் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான தமிழர் கட்சியின்
உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்தில் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை
தமிழரசுக்கட்சி வவுனியாவில் இன்று(19) தாக்கல் செய்துள்ளது.

வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை,வெண்கல செட்டிகுளம்
பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே இன்று தாக்கல்
செய்துள்ளது.

யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி! | Itak Party Files Election Nomination In Jaffna

அத்துடன், குறித்த வேட்புமனுவினை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மற்றும் வேட்பாளர்கள்,
ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் இன்று மாலை கையளித்துள்ளனர்.

மேலும், வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் தமிழரசுக்கட்சி
இம்முறை தனித்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.