முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்
பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சங்கு
கூட்டணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரி உபதவிசாளராக போட்டியின்றி
தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தவிசாளர் ,உபதவிசாளர் தெரிவுகள் வடக்கு
மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல்
மண்டபத்தில் இன்று (27) காலை நடைபெற்றது.

பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில்

தவிசாளர் தெரிவுக்காக தமிழரசுக் கட்சியின் பாலேந்திரன் மற்றும் தேசிய மக்கள்
சக்தியின் கார்த்தீபன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி | Itak Vavuniya South Tamil Pradeshiya Sabha

இதன்போது தெரிவுகளை இரகசியமாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்
கோரிக்கை முன்வைத்தனர்.

அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசிய
மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் 9
பேர் வெளிநடப்பு செய்திருந்தனர்.

சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்களில் 17பேர் தெரிவுகளை
பகிரங்கமாக நடத்துமாறு வாக்களித்திருந்தனர்.

பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக
நடத்தப்பட்டது.

அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட பா.பாலேந்திரனுக்கு ஆதரவாக 17
வாக்குகள் கிடைக்கப் பெற்றது.

வேறு நபர்களின் பெயர்கள்

அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும்
ஐக்கிய மக்கள் சக்தியின் 3 வாக்குகளும் ஜனநாயக தேசிய கூட்டணியின் 2
வாக்குகளும் ஈபிடிபியின் ஒரு வாக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு
வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்கும், சுயேட்சைக் குழுவின் ஒரு
வாக்குமாக 17 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி | Itak Vavuniya South Tamil Pradeshiya Sabha

வெற்றி பெறுவதற்கு 14
உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 17 வாக்குகள் கிடைக்கப்பெற்ற பாலேந்திரன்
புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக சங்கு
கூட்டணியின் பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரியின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் கோணேஸ்வரி
உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை தமிழ் மக்கள் கூட்டணியின் ஒரு உறுப்பினர் தவிசாளர் தெரிவின் போது
நடுநிலைமை வகித்திருந்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.