முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேறிய விளைவு: ஐங்கரநேசன் ஆதங்கம்

தமிழ்ப்பொதுவேட்பாளரின் தேறிய விளைவாக கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் செலவழித்த கணக்கு விபரங்கள் தொடர்பான வழக்கும் மாத்திரமே எஞ்சியுள்ளதாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கில் நேற்று (29.12.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் சிலவும் தமிழ் மக்கள்
பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பு
பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.

 குடிசார் அமைப்புகள் 

கோட்பாட்டு ரீதியாக இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் இவரது
வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தும் இருந்தது. அவர் இரண்டு இலட்சத்துக்கும்
அதிகமான வாக்குகளைத் திரட்டியிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேறிய விளைவு: ஐங்கரநேசன் ஆதங்கம் | Iyngaraneshan Criticised Ariyanethran

இது தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுவதில் கிடைத்த வெற்றியாகவே நோக்கப்பட்டது.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் தேசமாகத் திரட்டப்பட்ட மக்கள் புதிய
வழிகாட்டுதல் இல்லாததால் பிரிந்து நின்று தங்கள் விருப்பத்துக்கு
வாக்களித்தார்கள்.

யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் அரசியலை நெறிப்படுத்த சிவில் அமைப்புக்கள்
எனப்படும் குடிசார் அமைப்புகளின் வகிபாகம் இன்றியமையாததாக உணரப்பட்டது.

இதன்
விளைவாகவே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்று வெற்றிகரமாக எழுக தமிழ் பேரணிகளை
நடாத்திக் காட்டியிருந்தது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்காகக் குறைந்தபட்டசத் தீர்வுத் திட்டம்
ஒன்றையும் முன்வைத்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேறிய விளைவு: ஐங்கரநேசன் ஆதங்கம் | Iyngaraneshan Criticised Ariyanethran

தமிழ் மக்கள் பேரவையின் மீது மக்கள் மிகுந்த
எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தார்கள். ஆனால், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் தனியான ஒரு கட்சியை
ஆரம்பித்ததுடன் அது குறை ஆயுளுடன் முடிவுக்கு வந்தது.

குடிசார் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பொதுச்சபை மீதும் மக்கள்
நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

இதனால் தான் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள்
திரளாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நம்பிக்கையும் இப்போது
பொய்த்துப் போய்விட்டது. உரிய வழிவரைபடம் அதனிடம் இல்லாத காரணத்தால் ஜனாதிபதித்
தேர்தலைத் தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் வந்த பாராளுமன்றத் தேர்தலை அது
எதிர்கொள்ளமுடியாமல் பின்வாங்கியது.

தமிழ்த்தேசிய அரசியல் 

தமிழ்த்தேசிய உணர்வுடன் தன் பின்னால் திரண்ட மக்களுக்கு அது வழிகாட்டத்
தவறியது. இதுவும் வடக்குக் கிழக்கில் ஜே.வி.பி இன் வெற்றிக்கு ஒரு காரணமாக
அமைந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேறிய விளைவு: ஐங்கரநேசன் ஆதங்கம் | Iyngaraneshan Criticised Ariyanethran

மக்கள் சிவில் சமூக அமைப்புகளை நம்பமுடியாத ஒரு சூழ்நிலையை சிவில் அமைப்புகளே
இன்று உருவாக்கி விட்டன. அரசியலில் சிவில் அமைப்புகள் தங்களின் வகிபாகம்
குறித்து மீள் பரிசீலனை செய்தாலொழிய அவற்றால் இன்னொரு கட்டத்துக்கு நகர
முடியாது. சிவில் அமைப்புகள் சில கட்சிகளின் பினாமிகளாகவே உள்ளன.

சிவில் அமைப்புகளின் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தைப் பயன்படுத்தி சிலர்
தேர்தலில் குதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

கட்சி அரசியலை முன்னிறுத்தாத,
தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு மக்கள் இயக்கமாக சிவில்
சமூகங்கள் மாற்றம் பெற்றாலொழிய தமிழ்த்தேசிய அரசியலை வருங்காலங்களில் அவற்றால்
நெறிப்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.