பிக்பாஸ் 8
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடன் புதியதாக தொடங்கப்பட்டது பிக்பாஸ் 8 நிகழ்ச்சி.
இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் பிக்பாஸ் 8 வீட்டில் அருண் பிரசாத், முத்துக்குமரன், ரயான், ராணவ், விஜே விஷால், தீபக், மஞ்சரி, சௌந்தர்யா, பவித்ரா, ஜாக்குலின் என 10 போட்டியாளர்கள் உள்ளனர்.
இவர்களில் யார் டைட்டிலை ஜெயிக்கப்போவது என்பதை பொறுத்திருந்து காண்போம். தற்போது பிக்பாஸில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.
உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பும் மார்கோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா
சாதனை
பிக்பாஸில் என்னென்னவோ சாதனைகள் பற்றி நாம் பேசி வர தற்போது ஜாக்குலின் செய்துள்ள ஒரு விஷயம் தான் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
தமிழ் பிக்பாஸில் எலிமினேஷனுக்கு அதிக முறை நாமினேட் ஆன போட்டியாளர்களில் பாவனி ரெட்டி டாப்பில் இருந்தார், அதாவது அவர் 12 முறை நாமினேட் ஆகியும் எலிமினேட் ஆகாமல் இருந்தார்.
ஆனால் ஜாக்குலின் தற்போது தொடர்ச்சியாக 13 வாரங்கள் நாமினேட் ஆகியதன் மூலம் பாவனி ரெட்டியில் சாதனையை முறியடித்து உள்ளார்.