யாழ்(Jaffna) மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 08.45 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன்
இளங்குமரன், அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனும் உடனிருந்துள்ளனர்.
மேலும், கடமையேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல்
பணிப்பாளர், உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை
உத்தியோகத்தர்களும் பங்குபற்றியுள்ளனர்.