முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் தேர்தல் பாதுகாப்பிற்காக 1500 காவல்துறையினர் கடமையில்..!

வவுனியாவில் (vavuniya) ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக 1500 காவல்துறையினர் கடமையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும்
பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர
தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் ஏற்ப்பாடுகள் தொடர்பான இறுதி கலந்துரையாடல் வவுனியா
மாவட்ட செயலகத்தில் இன்று (16.9.2024) இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், காவல்துறையினர், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் தேர்தல் பாதுகாப்பிற்காக 1500 காவல்துறையினர் கடமையில்..! | Jaffna District Presidential Election Arrangement

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளதுடன் 12 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கெண்ணும் மத்திய நிலையமாக வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரி
செயற்படவுள்ளதுடன், அதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதைவேளை தேர்தல் கடமைகளுக்காக 1500ற்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர்
வவுனியா மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளில்
ஈடுபடுபவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் அனைத்தும்
பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள்

இதேவேளை, யாழ். (jaffna) மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தேர்தல் பாதுகாப்பிற்காக 1500 காவல்துறையினர் கடமையில்..! | Jaffna District Presidential Election Arrangement

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக குழுக் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாக்கெண்ணும் நிலையமாகச் செயற்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் குழுக்களின் செயற்பாட்டில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது சிறப்பான தொடர்பாடல் திறன் மூலம் வினைத்திறனாகச் செயற்பட்டுத் தேர்தல் கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் நலன்களைப் பேணிச் சிறப்பான செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.