முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உறுப்பினர்களின் கருத்தை தட்டிக்தழித்த யாழ். முதல்வர்!

சபையில் மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு முற்பட்ட உறுப்பினர்களுக்கு
பிரச்சினைகளை கதைப்பதற்கு நேரத்தை வழங்காமல் யாழ். முதல்வர் தட்டிக் கழித்து
சென்றதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந்த் குற்றம்
சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

யாழ்ப்பாணம் மாநகர சபையில் குழுத் தெரிவிற்காக கடந்த 23ஆம் திகதி தொடங்கப்பட்ட
கூட்டத்தின் தொடர்ச்சியான கூட்டம் இன்றையதினம்(27) யாழ்ப்பாணம் மாநகர சபையில்
நடைபெற்றது.

யாழ். முதல்வர் 

”இதன் போது குழுக்களை தெரிவு செய்வதற்கு எங்களது சகல
ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தோம்.

உறுப்பினர்களின் கருத்தை தட்டிக்தழித்த யாழ். முதல்வர்! | Jaffna Mayor Skips Public Issues Today

ஆனாலும் குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் பலரும் எழுந்து தமது
கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தை கேட்ட போது, “எதை வேண்டுமானாலும்
எழுத்தில் வழங்குங்கள். இந்த கூட்டத்தில் எதுவும் செய்ய முடியாது.

அடுத்த
கூட்டத்தில் பார்க்கலாம்” எனக் கூறிவிட்டு முதல்வர் சென்றபோது நாங்கள்
முதல்வரை வழிமறித்து எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருமாறு கோரினோம்.

ஆனால் இதுவரை எந்த ஒரு முதல்வரும் செய்யாத விடயத்தை இந்த முதல்வர் செய்து
இருக்கின்றார்.இது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம்.

பெரும்பான்மை

நாங்கள் நமது
வட்டாரத்தில் வெற்றி பெற்று வந்தவர்கள். நமது மக்களின் பிரச்சினையை நாங்கள்
தெருவில் இருந்து கதைக்க முடியாது, சபையில் தான் கதைக்க வேண்டும். அவர்
வழமைக்கு மாறாக செயற்பட்டிருக்கின்றார்.

உறுப்பினர்களின் கருத்தை தட்டிக்தழித்த யாழ். முதல்வர்! | Jaffna Mayor Skips Public Issues Today

இவ்வாறான செயற்பாடானது தமக்கு மன
வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

இது ஒரு தொங்கு சபை. பெரும்பான்மை சபையை நடத்துவது போல இந்த சபையை நடத்த
நினைக்கின்றார்கள் ஆனால் 23 பேர்கள் இருக்க வேண்டிய இடத்தில் அவரது கட்சியில் 13
பேரே உள்ளனர்.

எப்போதும் தாங்கள் பெரும்பான்மையுடன் இருப்பார்கள் என்ற
எண்ணத்தில் சபையை நடாத்த நினைப்பது நல்லதாக தோன்றவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.