யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று(5) 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவுத் திட்டம் இன்று யாழ். மாநகர சபையின் சபா மண்டபத்தில் மேயர்
வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு
விவாதிக்கப்பட்டது.
விவாதத்தின் பின்னர் வரவு – செலவுத் திட்டம் சபை அங்கீகாரத்துக்கு
விடப்பட்டது. இதன்போது ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும்
அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வரவு – செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வரவு – செலவுத் திட்டம்
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 13 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த்
தேசியக் கூட்டணி மற்றும் ஈ.பி.டி.பியின் தலா 4 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள்
சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலா ஓர் உறுப்பினர்களும் என 23
உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும், அகில இலங்கைத் தமிழ்க்
காங்கிரஸின் 11 உறுப்பினர்களுமாக 21 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து
வாக்களித்தனர்.
மேலதிக தகவல்-தீபன்

