யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (All Ceylon Tamil Congress) கட்சியின் உறுப்பினர் வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
ஜீவநந்தினி பாபு தலைமையில் தவிசாளர் தெரிவுக்காக இன்று (17) நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் 7 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார்.
தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் தி.சந்திரசேகர், அகில இலங்கை தமிழ்
காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவர்
முன்மொழியப்பட்டிருந்தனர்.
ஈபிடிபி வெளிநடப்பு
இந்த வாக்கெடுப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் பரான்சிஸ் ரட்ணகுமார் வெளிநடப்பு
செய்ததுடன் மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம்பெற்ற நிலையில் 7/3 என்ற
அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தேவசிகாமணி
தேவராசேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam), ஜனநாயக போராளிகள் கட்சியின் யாழ் மாவட்ட தலைவர்
ஆ.சுரேஸ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

