யாழ்ப்பாண (Jaffna) மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள சமூகவலைத்தளம் ஒன்றின் ஊடாக சமூகச் சீர்கேடுகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் உள்ள சில பாடசாலை மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து, அயற்பிரதேசங்களின் சில பாடசாலை மாணவர்களையும் ஒன்றிணைத்து “YMD” எனும் பெயரில் சமூகவலைத்தளமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதில் பாடசாலை மாணவர்கள் மட்டுமே அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
குறித்த வலைத்தள அங்கத்தவர்கள் இடையே ஆபாச காணொளிகள், அங்கத்தவர்களின் தனிப்பட்ட ஆபாச செயற்பாடுகள் அடங்கிய காணொளிகள் என்பன பரிமாறிக் கொள்ளப்படுவதாக பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது.
அத்துடன் குறித்த வலைத்தளத்தின் ஊடாக அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து அடிக்கடி பார்ட்டிகளை ஏற்பாடு செய்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் யாழில் உள்ள சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேணடும் என வலியுறுத்தியுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.