தேசிய மக்கள் சக்தி, தமிழரின் தீர்வு விடயத்தில் இதுவரை எவ்வித சமிஞ்ஞையையும் வழங்கவில்லை என்றும் காலத்தின் கட்டளைக்கு அமைய தமிழரின் தீர்வு தொடர்பில் வெளிப்படையான முன்னகர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என யாழ் (Jaffna) பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் (S. Raghuram) தெரிவித்துள்ளார்.
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய ஈழத்
தமிழர்களின் பிரச்சினைகளை எங்களுடைய போராட்ட வரலாற்றில் நாங்கள் தீர்வுகளை
நோக்கி நகர வேண்டுமாக இருந்தால் அந்த தீர்வுக்காக கொழும்பிலிருந்து
முன்னெடுக்கபடும் நகர்வுகள் தொடர்பில் நாங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
வெறுமனே எங்களுடைய அபிலாசைகளை கோரிக்கைகளை தன்னிச்சையாக நாங்கள்
முன்னெடுப்பதை விட அவ்வாறான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்கு
கொழும்பிலிருந்து அறிகுறிகளாக சமிஞ்ஞைகளை நாங்கள் எதிர்பார்க்க வேண்டிய
இடத்திலிருந்து இருக்கவேண்டும்.
இன்று பதவி ஏற்றிருக்கக்கூடிய தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வலுவான
கட்டமைப்புடன் இருந்தாலும் கூட கொழும்பிலிருந்து கிடைக்கின்ற செய்திகள் தேசிய
மக்கள் சக்தி அரசாங்கத்தின் வலுவான அரசியலில் எதை சாதிக்க வேண்டும் என்ற
கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/d94VKzMgD-A