வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதில், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இரா.சாணக்கியன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ்.அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இருதரப்பு பயணம்
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் முதலாவது இருதரப்பு பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் எட்டுப்பேர் உள்ளடங்கிய பேராளர்களுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பில் இணைந்துகொண்டமைக்காக திருவாளர்கள் @ShanakiyanR, @Mavai_S, @MASumanthiran, @ImShritharan, @SAdaikalanathan, தர்மலிங்கம்… https://t.co/Ke7toqUHJm
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 20, 2024
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, இலங்கையின் பல முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்துள்ளார்.