தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan), தமிழ் மக்களின் வாக்குகளையும் உணர்வுகளையும் கொண்டு அரசியல் வியாபாரம் செய்வதாக அரசியல், சமூக செயற்பாட்டாளரான ஜனகன் விநாயகமூர்த்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு நேற்றைய தினம் வழங்கிய நேர்காணல் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் உணர்வுகளை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் மனோ கணேசன் போன்றோரை பார்க்கையில் அதிக கோபம் வருகின்றது.
மேலும், எங்களையும் எங்களின் பணங்களையும், வாக்குகளையும் உணர்வுகளையும் தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக அவர்கள் ஒரு பகடைகாயாக பயன்படுத்துகின்றார்கள்.
எனவே, மக்கள் தீர்ப்பு வழங்கவிருக்கும் இத்தருணத்தில் இவ்வாறான கபட நாடகமாடி அரசியல் வியாபாரங்கள் மேற்கொள்வோர் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளதாவது,