ஜனநாயகன்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்… எந்த டிவி, நேரம் முழு விவரம்
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு
அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், இறுதிக்கட்டத்தை ஜனநாயகன் படப்பிடிப்பு எட்டியுள்ளது. ஆம், வருகிற மே 15 தேதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பாகவே விஜய்யின் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்படும் என கூறுகின்றனர்.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற கையோடு, முழுமையாக அரசியலில் களம்காண உள்ளார் தளபதி விஜய். மேலும் ஜூன் மாதத்திற்கு பின் அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.