அரசியல்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தற்போது சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு சென்றுள்ளார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. அரசியல் களத்தில் விஜய் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
கனவில் வந்த நடிகர் விஜய்.. நடிகர் பார்த்திபன் தவெகவில் இணைய போகிறாரா?
இந்த நிலையில், நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் களமிறங்கவிருந்த சம்பவம் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதிமுக-வில் அஜித்
ஒரு முறை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது ஆலோசகர் ஒருவரிடம் அஜித்தை தனது கட்சியில் இணைப்பது குறித்து பேசியுள்ளார். அஜித்திற்கு ஜெண்டில் மேன் என்கிற பார்வை மக்களிடம் இருக்கிறது, அதனால் அவரை அதிமுகவில் இணைத்துக்கொள்ளலாம் என ஜெயலலிதா நினைத்தாராம்.
ஆனால், அஜித் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் ஆனால், அஜித் தான் சரியான நபர் என்றும் அவரே கூறினாராம். இந்த தகவல் வெளிவந்த நிலையில், ஒருவேளை அஜித் அரசியலுக்கு ஜெயலலிதாவின் ஆதரவுடன் வந்திருந்தால் கண்டிப்பாக முதல்வர் ஆகியிருப்பார், இவ்வளவு பெரிய பொறுப்பை மறுத்துவிட்டாரே என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.