ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம்.
இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து ஜெயம் ரவி பற்றிய செய்திகள் அதிகம் வலம் வருகிறது. பட செய்திகள் ஒருபக்கம் இருந்தாலும் அவரது சொந்த விஷயங்கள் குறித்து நிறைய பேசப்பட்டது.
ஆனால் அவரோ எனது சொந்த விஷயம் குறித்து கருத்து கூற யாருக்கும் உரிமை இல்லை, படம் பற்றி பேசினால் கண்டிப்பாக நான் மதிப்பேன் என கூறி இருந்தார்.
நடிகரின் ஆசை
கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் படம் வெளியானது, ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை, பாக்ஸ் ஆபிஸிலும் கடும் தோல்வியை சந்தித்தது.
அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற படம் வெளியாக உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி-நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.
இப்பட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி பேசும்போது, இந்த படத்தின் மூலம் எனது 22 ஆண்டு கனவு பூர்த்தியாகியுள்ளது.
சினிமாவில் நான் தொடர்ந்து நடித்து வந்தாலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிக்க வேணடும் என்பது பெரிய கனவாக இருந்தது. தற்போது இந்த படத்தின் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது என சந்தோஷமாக கூறியுள்ளார்.