நடிகர் விஷால்
நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. அதன் பின் இவர் நடிப்பில் ரத்னம் திரைப்படம் வெளியானது ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
தற்போது, விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷால் மேடையில் நடுங்கிக்கொண்டே பேசியதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
65 வயதில் இளம் நடிகர்களுக்கு போட்டியாக இருக்கும் நாகர்ஜுனாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்.. என்ன பாருங்க
இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. இந்நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி
விஷால் குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நெகிழ்ச்சி கருத்து
அதில், ” விஷாலை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருக்கிறான். விரைவில் இதில் இருந்து மீண்டு வருவான், அதற்கு அவன் தைரியம் துணை நிற்கும்.
என் நண்பன் விஷாலின் நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவில் சிங்கம் போல் மீண்டு வருவான்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.